14 நாட்கள் முழு ஊரடங்கு எதிெராலி: மைசூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்


14 நாட்கள் முழு ஊரடங்கு எதிெராலி: மைசூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 27 April 2021 1:59 AM IST (Updated: 27 April 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதன் எதிெராலியால், மைசூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

மைசூரு: 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதன் எதிெராலியால், மைசூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

14 நாள் முழு ஊரடங்கு

கர்நாடகத்தில் கொேரானா 2-வது அலை தொடங்கி தீவிரமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நாள்தோறும் பாதிப்பும், பலியும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் கடந்த 24, 25-ந்தேதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மைசூருவில் 2 நாட்களும் ெபாது மக்கள் வீட்டிற்குள் முடங்கினர். 

இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் ஊரடங்கு முடிந்ததும் பொது மக்கள் வெளியே வர தொடங்கினார்கள். தங்களது இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டனர். மேலும் பஸ்கள், அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் ஓடின. அதேபோல், மார்க்கெட்டுகள், கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்தும் திறந்து இருந்தன. இந்தநிலையில் நேற்று மாலை மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு அரசு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது. அதில் இன்று முதல்(செவ்வாய்க்கிழமை) 14 நாட்கள் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தது.

சொந்த ஊர்களுக்கு...

மாநில அரசின் அறிவப்பால் மைசூரு மாவட்டத்தில் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுனர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். மேலும் 14 நாட்கள் ஊரடங்கால் மதுபானக்கடைகளில் பெட்டி, பெட்டியாக மதுபானங்களை மதுப்பிரியர்கள் வாங்கிச் சென்றனர். 

மேலும் மைசூருவுக்கு பிழைப்புக்காக வந்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றதை பார்க்க முடிந்தது. இதுபற்றி அவர்கள் கூறுகையில், அரசு சில நிபந்தனைகளை விதித்தால் அதனை அனுசரிக்க தயாராக உள்ளோம். ஆனால் ஊரடங்கு தேவையில்லாதது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்றனர். மொத்தத்தில் மைசூரு மாவட்டத்தில் 14 நாட்கள் ஊரடங்கு மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story