மதுபான கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்; பெட்டி, பெட்டியாக மது வாங்கி சென்றனர்
கர்நாடகத்தில் ஊரடங்கின் போது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மதுபான கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர். பெட்டி, பெட்டியாக மதுபானங்களை அவர்கள் வாங்கி சென்றனர்.
பெங்களூரு: கர்நாடகத்தில் ஊரடங்கின் போது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மதுபான கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர். பெட்டி, பெட்டியாக மதுபானங்களை அவர்கள் வாங்கி சென்றனர்.
மதுக்கடைகள் திறக்க அனுமதி
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்தது. இதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 14 நாட்கள் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணியில் இருந்து காலை 10 மணிவரை அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதுபோல், பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் திறந்திருக்கவும் அனுமதி அளித்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மதுக்கடைகளில் இருந்து மதுபானங்களை பார்சல்களாக வாங்கி செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபான விடுதிகள் திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், ஊரடங்கின் போது 14 நாட்களும் மதுக்கடைகளும் மூடப்பட இருப்பதாக தகவல்கள் பரவியது.
மது பிரியர்கள் குவிந்தனர்
இதன் காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு மதுபானங்கள் வாங்குவதற்காக மதுபிரியர்கள் குவிந்தனர். மதுக்கடைகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் அவர்கள் அணிவகுத்து நின்றனர். அவ்வாறு நின்றவர்கள் ஒரு பாட்டில், 2 பாட்டில்களை வாங்கி செல்லாமல் பெட்டி, பெட்டியாக மதுபானங்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. அதாவது ஊரடங்கு 14 நாட்கள் அமலில் இருப்பதால், 14 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக நேற்றே வாங்கி சென்றனர்.
அதே நேரத்தில் ஊரடங்கின் போது மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது பற்றி தெரியவந்ததும், மதுக்கடைகள் முன்பு குவிந்திருந்த மதுபிரியர்களின் கூட்டம் குறைய தொடங்கியது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் மாநிலத்தில் மதுக்கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி அளித்திருப்பதற்கு மதுபிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story