சிவகிரி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை


சிவகிரி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 27 April 2021 6:32 AM IST (Updated: 27 April 2021 6:33 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சிவகிரி,

சிவகிரி மற்றும் அதன் சுற்று பகுதியான வேட்டுப்பாளையம், பாலமேட்டு புதூர் பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமையில் மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் சத்தான உணவுகள் சாப்பிடுவது குறித்து பொதுமக்களுக்கு டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

Next Story