ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.5½ கோடி மோசடி: தலைமறைவான குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டுகோள்

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.5½ கோடி மோசடி: தலைமறைவான குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டுகோள்
x
தினத்தந்தி 27 April 2021 6:48 AM IST (Updated: 27 April 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.5½ கோடி மோசடி செய்து தலைமறைவான குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு
ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.5½ கோடி மோசடி செய்து தலைமறைவான குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ரூ.5½ கோடி மோசடி
பெருந்துறை தாலுகா சென்னிமலை காட்டூர் ரோடு ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் சி.என்.செல்வகுமார் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் கடந்த 2012-ம் ஆண்டு 140 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.5 கோடியே 56 லட்சத்து 55 ஆயிரம் முதலீடு பெற்று திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தார். இதுகுறித்து முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.              இதைத் தொடர்ந்து ஈமு பார்ம்ஸ் உரிமையாளர் செல்வகுமார் தலைமறைவானார். 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி முதல் கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும், நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் உள்ளது.
அறிவிக்கப்பட்ட குற்றவாளி
கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் நீதிபதி முன்பு செல்வகுமார் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது. தவறும்பட்சத்தில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக ஆணை பிறப்பிக்கப்படும்.
செல்வகுமார் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு 0424 2256700, 94981 78566 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story