ஊத்தங்கரை அருகே கிணற்றில் இளம்பெண் உடல் மீட்பு கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை


ஊத்தங்கரை அருகே  கிணற்றில் இளம்பெண் உடல் மீட்பு கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 April 2021 8:35 AM IST (Updated: 27 April 2021 8:35 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே கிணற்றில் இளம்பெண் உடல் மீட்பு கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

கல்லாவி, ஏப்.27-
ஊத்தங்கரை அருகே கிணற்றில் இளம்பெண் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் தற்கொலை செய்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் அனுமந்தீர்த்தம் கிராமத்தில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில் முனியப்பன் கோவில் அருகே உள்ள கிணற்றில் 25 மதிக்கத்தக்க இளம்பெண்னின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உடனடியாக ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். மேலும் ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் கயிறு மூலம் இளம்பெண்ணின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இறந்த இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேல் கிணற்றில் மிதந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இளம்பெண் பச்சை கலர் சுடிதார் அணிந்திருந்தார். உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால் இறந்த இளம்பெண்ணை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
விசாரணை
இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் மர்மநபர்கள் கொலை செய்து விட்டு உடலை கிணற்றில் வீசி சென்றனரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் பெண் காணவில்லை என்ற புகார் ஏதாவது இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். கிணற்றில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
======

Next Story