காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு தேன்கனிக்கோட்டை அருகே பரிதாபம்


காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு தேன்கனிக்கோட்டை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 27 April 2021 8:35 AM IST (Updated: 27 April 2021 8:35 AM IST)
t-max-icont-min-icon

காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு தேன்கனிக்கோட்டை அருகே பரிதாபம்

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஒப்பந்த தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 55). இவர் ஒசூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்றார்.
அப்போது தேன்கனிக்கோட்ைட அருகே தின்னூர் என்ற இடத்தில் சென்றபோது காட்டுப்பகுதியில் இருந்து வந்த காட்டுப்பன்றி ஒன்று முனிராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிளின் குறுக்கே பாய்ந்து ஓடியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
விசாரணை
முனிராஜ் இறந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து தேன்கனிகோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 
பின்னர் முனிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======

Next Story