காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
நீர்வரத்து அதிகரிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனிடையே தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
வெறிச்சோடிய ஒகேனக்கல்
இந்த நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் ஆள் ஆரவாரமின்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது.
======
Related Tags :
Next Story