மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளித்தபோது கோவில் குளத்தில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி + "||" + Plus-2 student drowns in temple pool while bathing with friends

நண்பர்களுடன் குளித்தபோது கோவில் குளத்தில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி

நண்பர்களுடன் குளித்தபோது கோவில் குளத்தில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளத்தில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
தாம்பரம், 

சென்னையை அடுத்த பழைய பல்லாவரம், தர்கா சாலையை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 18). இவர், அப்பகுதியில் உள்ள மறைமலை அடிகளார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று மதியம் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளத்தில் குளித்தார். நண்பர்கள் அனைவரும் குளத்தில் ஆனந்தமாக விளையாடி குளித்து கொண்டிருந்தனர்.

நீரில் மூழ்கி பலி

அப்போது விக்னேஷ், திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாத்திஹ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், நீண்டநேரம் போராடி குளத்தில் மூழ்கி பலியான மாணவர் விக்னேஷ் உடலை மீட்டனர்.

சங்கர்நகர் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் வங்கி அதிகாரி பலி ஆக்சிஜன் துண்டிக்கப்பட்டதால் இறந்ததாக மனைவி புகார்
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த வங்கி அதிகாரி பலியானார். ஆக்சிஜனை நிறுத்தியதால் தனது கணவர் உயிரிழந்ததாக அவரது மனைவி பரபரப்பு புகார் தெரிவித்தார்.
2. பிரபல பாடலாசிரியர் கொரோனாவுக்கு பலி
பிரபல பாடலாசிரியர் கொரோனாவுக்கு பலி.
3. பிரசவத்துக்கு சென்ற போது துயரம் மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலி
பிரசவத்துக்கு சென்ற போது, மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலியாகினர்.
4. துணி துவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி
வீட்டில் துணி துவைக்கும் போது மின்சாரம் தாக்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
5. நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.