திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை.அதிகாரி எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை இணை இயக்குனர் கி.ராஜசேகர், திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்தபின் உரிய ரசீதுகளை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை கருவி மூலமாக விற்பனை செய்யப்பட வேண்டும்.
விற்பனை செய்த உடன் இருப்பு விவரங்களை சரியாக பராமரிக்க வேண்டும். அதிக விலைக்கு உரங்களை விற்றாலும், உரிய ஆவணம் இன்றி விற்பனை செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரம் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை கட்டாயம் கடைகளில் பராமரிக்கப்பட வேண்டும்.
அனுமதி பெறாத உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. 2020- 21 ஆம் ஆண்டு விலையிலேயே தற்போதும் டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய உள்துறை தெரிவித்துள்ளது. இதனால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story