தட்டார்மடம் அருகே மீனவர் தற்கொலை
தட்டார்மடம் அருகே மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள பெரியதாலை சேவியர் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது42). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருக்கும், மனைவி சகாயத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகேந்திரன், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் மனமுடைந்த அவரது மனைவி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தெருவில் நின்று புலம்பிக் கொண்டிருந்த அவர் அன்று நள்ளிரவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story