குடியாத்தத்தில் தொற்றுக்கு மனைவி பலியான நிலையில் ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டுவும் இறப்பு
குடியாத்தத்தில் தொற்றுக்கு மனைவி இறந்த 3 நாட்களில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டுவும் இறந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது.
குடியாத்தம்
கணவன்-மனைவி
வேலூர் மாவட்டத்தில் கொரோனோ தொற்று வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு சத்தியமூர்த்தி (வயது 70). இவரது மனைவி வள்ளியம்மாள் (64). கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தனர்.
ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு பலி
அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கணவன், மனைவி இருவருக்கும் கொரோனோ தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு அங்கு சிகிச்சைபெற்று வந்தனர். சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சத்தியமூர்த்தியும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் பரிதாபமாக இறந்தார். குடியாத்தத்தில் கணவன் மனைவி இருவரும் கொரோனோ தொற்றால் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story