நீலகிரிக்கு வர இ பதிவு நடைமுறை ரத்து


நீலகிரிக்கு வர இ பதிவு நடைமுறை ரத்து
x
தினத்தந்தி 27 April 2021 9:01 PM IST (Updated: 27 April 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

பிறமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆவணங்களை காண்பித்து வர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும். கலெக்டர் தெரிவித்தார்.

ஊட்டி

பிறமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆவணங்களை காண்பித்து வர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும். கலெக்டர் தெரிவித்தார். 

பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் அனுமதி பெற்று நடைபாதை வியாபாரிகள் 500 பேர் உள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்கள் அருகே கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். 

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்  நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நடைபாதை வியாபாரிகளுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தாவரவியல் பூங்கா முன்பு நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நடைபாதை வியாபாரிகளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

இ-பதிவு நடைமுறை ரத்து 

நடைபாதை வியாபாரிகளுக்கு காய்கறிகளை விவசாயிகள் தாமாக முன்வந்து நன்கொடையாக வழங்கினர். முதல்கட்டமாக 100 பேருக்கு வழங்கப்பட்டது. மற்றவர்களும் நிதி உதவி செய்தால் வரவேற்கப்படுகிறது. 

சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வருவதற்கான இ-பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

 அதற்கு பதிலாக வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்கள் நீலகிரியில் நிலம், வீடு உள்ளவர்கள் மற்றும் எதற்காக வருகின்றனர் போன்ற ஆவணங்களை சோதனை சாவடிகளில் காண்பித்து வர அனுமதிக்கப் படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி வர இ-பதிவு நடைமுறை தொடர்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 


Next Story