. கம்பம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடக்கம்


. கம்பம் பகுதியில்  நெல் அறுவடை பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 27 April 2021 9:01 PM IST (Updated: 27 April 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கியது.

கம்பம்:
தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணைபாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. கம்பம் சின்னவாய்க்கால், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, மஞ்சள்குளம், ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், அண்ணாபுரம் பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் நடவுசெய்யப்பட்ட நெற்பயிர்களில் தற்போது அறுவடை தொடங்கி உள்ளது. 
இந்த அறுவடையின்போது கடந்த அறுவடையை காட்டிலும் குறைவான மகசூல் கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ரூ.1,100-க்கு விற்பனையான 61 கிலோ எடைகொண்ட நெல் மூட்ைட இந்த ஆண்டு ரூ.950-க்கு விற்பனையாகிறது. இவ்வாறு விளைச்சல் குறைவு, விலை குறைவு என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
எனவே அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



Next Story