5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 27 April 2021 9:06 PM IST (Updated: 27 April 2021 9:06 PM IST)
t-max-icont-min-icon

ீலகிரி மாவட்டத்தில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தடுத்து நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் கூடலூர் மற்றும் குன்னூரில் தலா 2, ஊட்டியில் ஒன்று என 5 குழந்தை திருமணங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட சமூக நல அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. 

உடனடியாக சம்பந்தப்பட்ட போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கு 5 குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுத்து நிறுத்தினர். 18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைகள், 21 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள் திருமணம் செய்ய முயற்சித்த போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

5 பேர் மீது வழக்கு 

இது தொடர்பாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன் பேரில் பெண் குழந்தைகளை திருமணம் செய்ய முயன்ற 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் திருமணம் செய்ய இருந்த பெண் குழந்தைகளுக்கு அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
 

Next Story