அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை


அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை
x
தினத்தந்தி 27 April 2021 3:37 PM GMT (Updated: 27 April 2021 3:37 PM GMT)

அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை

கோவை

கோவை, நீலகிரி, திருப்பூரில் போட்டியிட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார்.

ஓட்டு எண்ணிக்கை

தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அ.தி.மு.க. தலைமை முகவர்கள் மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் உள்ள கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

விழிப்புடன் செயல்பட வேண்டும்

கூட்டத்தில் வேட்பாளர்கள் முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்ட னர். இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ஓட்டு எண்ணிக்கை மையங்களில் அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் தீவிரமாக இருக்க வேண்டும். தலைமை முகவர்கள் ஓட்டு எண்ணிக்கை அன்று தொடக்கம் முதல் இறுதி வரை விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். 


தபால் ஓட்டுகள், வேட்பாளர்களுக்கு சேர வேண்டிய ஓட்டுகள் முழுவ  தும் அந்தந்த வேட்பாளர்களுக்கு சரியாக சேர்க்கப்படு கிறதா? என்று கண்காணிக்க வேண்டும். 

இது போல் நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களி லும் ஓட்டு எண்ணிக்கை யின் போதும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளர்கள் பங்கேற்பு

கூட்டத்தில் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ச்சு னன், கவுண்டம்பாளையம் தொகுதி பி.ஆர்.ஜி.அருண்குமார், சிங்காநல் லூர் தொகுதி கே.ஆர்.ஜெயராம், வால்பாறை தொகுதி அமுல் கந்தசாமி, சூலூர் தொகுதி கந்தசாமி, மேட்டுப்பாளையம் தொகுதி ஏ.கே.செல்வ ராஜ், கோவை தெற்கு தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன்,


நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி ஜெயசீலன், குன்னூர் தொகுதி கப்பச்சி வினோத், ஊட்டி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் போஜ ராஜன், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி எம்.எஸ்.எம்.ஆனந்தன், உடுமலை தொகுதி ராதாகிருஷ்ணன், 

மடத்துக்குளம் தொகுதி மகேந்திரன், திருப்பூர் தெற்கு தொகுதி குணசேகரன், திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார், காங்கேயம் தொகுதி ராமலிங்கம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story