தாராபுரம் பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
தாராபுரம் பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
குண்டடம்
தாராபுரம் பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
உயர் மின்கோபுரங்கள்
தாராபுரம் பகுதியில் சுஸ்லான் காற்றாலை நிறுவனம் போலீஸ் பாதுகாப்புடன் உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை செய்து வருகிறது. இந்தபணிகள் மாவட்ட நிா்வாகத்தின் தரப்பில் உயா்நீதிமன்ற உத்தரவுபடி நடந்துவருகிறது என்று கூறப்படுகிறது. இதில் விவசாயிகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். அந்த மேல்முறையிடு முடியும்வரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சி சாா்பில் நேற்று முன்தினம் தாராபுரம் சப்-கலெக்டா் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த பிரச்சினை தொடர்பாக காற்றாலை நிா்வாகத்தினருடன் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் தாராபுரம் தாசில்தாா் ரவிச்சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராமன், ஈரோடு பாராளுமன்ற தொகுதி கணேசமூர்த்தி எம்.பி., மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தோல்வி
பேச்சுவார்த்தையில் விவசாயிகள் தரப்பில் மின்பாதைமற்றும் உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உாிய நிவாரணம் வழங்க வேண்டும். அதுபோன்று மேல் முறையீடுவழக்கு முடியும் வரை மின்பாதை அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்” என்றனா். ஆனால் தனியாா் காற்றாலை நிா்வாகத்தினா் விவசாயிகளின் கோாிக்கையை ஏற்க மறுத்தனா். இதனால் பேச்சுவாா்தை தோல்வியில் முடிந்தது.
அதைத் தொடா்ந்து தாலுகா அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த கணேசமூா்த்தி எம்.பி., “ எங்களது அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்றாா். பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கதாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டா் மகேந்திரன் தலைமையில் போலீசாா்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
Related Tags :
Next Story