வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 441 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 441 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் பாதிப்பு குறையவில்லை. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 198 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையின் முடிவில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 441 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், வேலூர் விடுதியில் தங்கி சிகிச்சை பெறும் 20 பிறமாநிலங்களை சேர்ந்தவர்களும் அடங்குவர். வேலூர் மாநகராட்சி பகுதியில் போலீசார், அரசு ஊழியர்கள் உள்பட 282 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். 441 பேரும் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரும் உடல் பரிசோதனைக்கு பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வேலூர் சத்துவாச்சாரி 1-ம் பகுதி 4-வது குறுக்கு தெரு, தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி புதுத்தெருவில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்டதால் 2 தெருக்களும் இரும்பு தகரத்தால் அடைக்கப்பட்டன. வேலூர் மாநகராட்சி பகுதியில் இதுவரை 20 தெருக்கள் தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story