ரிஷிவந்தியம் அருகே 7 பேருக்கு கொரோனா கிராமத்தின் தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது
ரிஷிவந்தியம் அருகே 7 பேருக்கு கொரோனா கிராமத்தின் தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் அடுத்த பழையசிறுவங்கூர் கிராமத்தில் நடுத்தெருவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருக்கு கடந்த 24-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்தினர் 4 பேர் உள்பட 6 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து குறிப்பிட்ட தெருவுக்குள் மக்கள் செல்லாமல் இருப்பதற்காக இருபுறமும் சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும் ரிஷிவந்தியம் சுகாதாரத் துறையினர் வீடு, வீடாக சென்று யாருக்காவது கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கிறதா? என ஆய்வுசெய்து கபசுர குடிநீர் வழங்கினர். இதில் 41 பேரின் உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.
Related Tags :
Next Story