குமரலிங்கத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்


குமரலிங்கத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
x
தினத்தந்தி 27 April 2021 9:37 PM IST (Updated: 27 April 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

குமரலிங்கத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

போடிப்பட்டி, 
குமரலிங்கம் ஆற்றுப்பாலம் அருகில் சாலையோரம் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- தற்போது பல கிராமச்சாலைகளின் ஓரங்கள் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. இருசக்கர வாகனங்களில் மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களிலும் மூட்டை மூட்டையாக குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருகிறார்கள். அதனைத் தடுக்கவோ அவ்வப்போது சுத்தப்படுத்தவோ உள்ளாட்சி நிர்வாகங்கள் அக்கறை காட்டுவதில்லை. அந்த வகையில் தற்போது குமரலிங்கம் ஆற்றுப்பாலம் அருகில் மர்ம ஆசாமிகள் குப்பைக்கழிவுகளைக்கொண்டு வந்து கொட்டிச் சென்றுள்ளனர். இது ஒரு ஆரம்பமாக அமைந்து விட்டால் இந்த பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்த பகுதிக்கு அருகில் ஆயக்கட்டு பாசனத்துக்குட்பட்ட நெல் விளையும் பூமிகள் உள்ளது.இந்த பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டால் கழிவுகளால் விளை நிலங்கள் பாழாகும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  பொதுமக்கள் கூறினர். 

Next Story