விழுப்புரத்தில் 201 பேருக்கு தொற்று உறுதி
விழுப்புரத்தில் 201 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 17,686 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 119 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 16,353 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 1,214 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் ஒரே நாளில் 201 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,887 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று 121 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்தவர்களில் 135 பேரின் முடிவு நேற்று வெளியானது. இதில் 86 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 12,227 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story