கே.வி.குப்பத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கே.வி.குப்பத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு, நாயக்கர் தெரு, அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் பிரச்சினை இருந்துவந்துள்ளது. பாலாற்றில் இருந்து இப்பகுதிக்கு குடிநீர் கொண்டுவர போடப்பட்ட ஒப்பந்தம் வெகு நாட்களாக நிலுவையில் இருந்து வருவதால் குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் யாரும் தீர்த்து வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கே.வி.குப்பம் பஸ் நிலையம் அருகில் காட்பாடி ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் குமரன், பஞ்சாயத்து எழுத்தர் ராஜேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று கூறினர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story