திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 546 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி வாலிபர் ஒருவர் பலியானார்.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 546 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி வாலிபர் ஒருவர் பலியானார்.
x
தினத்தந்தி 27 April 2021 10:23 PM IST (Updated: 27 April 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 546 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி வாலிபர் ஒருவர் பலியானார்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 546 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி வாலிபர் ஒருவர் பலியானார்.
 கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 400-க்குள் இருந்த எண்ணிக்கையை அதிகபட்சமாக 546 ஆக அதிகரித்து இருக்கிறது. ஒருநாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரிகளும் கவலையடைந்துள்ளனர்.
468 பேர் குணமடைந்தனர்
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் நேற்று 468 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிகிச்சை முடிந்து இதுவரை 22 ஆயிரத்து 281 பேர் வீடு திரும்பியிருக்கிறார்கள். தற்போது மாவட்டத்தில் 2 ஆயிரத்து 595 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் திருப்பூர் மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையை தொடர்ந்து வருகிறார்கள்.
வாலிபர் பலி
திருப்பூரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.

Next Story