1 மணி நேரம் கொட்டித்தீர்த்த பலத்த மழை


1 மணி நேரம் கொட்டித்தீர்த்த பலத்த மழை
x
தினத்தந்தி 27 April 2021 11:21 PM IST (Updated: 27 April 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவாரூர்;
திருவாரூரில் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
கோடை வெயில்
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். கோடை வெப்பத்தை சமாளிக்க மக்கள் இளநீர், பதநீர், நுங்கு ஆகியவற்றை அதிக அளவு வாங்கி உட்கொண்டு வந்தனர். இதனால் திருவாரூரில் ஆங்காங்கே புதிதாக குளிர்பான கடைகள் தொடங்கப்பட்டன. இந்தநிலையில் திருவாரூரில் நேற்று காலை முதல் வானில் கருமேக கூட்டம் சூழ்ந்து மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது.
பலத்த மழை
இதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மழை தூரலுடன் பெய்ய தொடங்கிய நிலையில் நேரம் செல்ல செல்ல வேகம் அதிகரித்து 1 மணி நேரம் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளித்தது. வாகன ஒட்டுனர்கள், நடந்து சென்றவர்கள் சற்று பாதிக்கப்பட்டனர். இருப்பினும் வாட்டி வதைத்த வெயிலுக்கு குளுமை சேர்க்கும் வகையில் இந்த மழை இருந்ததால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கூத்தாநல்லூர் 
கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று மதியம் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து லேசாக பெய்ய தொடங்கிய மழை பரவலாக பெய்தது. கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், நாகங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், வேளுக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், நேற்று மாலையில் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியது.

Next Story