ஜல்லிக்கட்டு; கோவில் காளைகள் மட்டுமே அவிழ்க்கப்பட்டன
கோவில் காளைகள் மட்டுமே அவிழ்க்கப்பட்டன
விராலிமலை.ஏப்.28-
விராலிமலையில் பிரசித்திபெற்ற மெய்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் விராலிமலை மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களின் குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும். மேலும் அன்றைய தினம் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜல்லிக்கட்டு சம்பிராயத்துக்காக நடத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் கோவில்காளைகள் மட்டுமே அவிழ்த்துவிடப்பட்டது. முன்னதாக கோவில்காளைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவில் அருகே உள்ள விழியம்பூர் குளக்கரை திடலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் வாடிவாசலில் இருந்து அந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. யாரும் காளைகளை பிடிக்கவில்லை. இதில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story