உப்பிலியபுரம் வாரச்சந்தையில் முக கவசம் இன்றி உலா வந்த பொதுமக்கள்
உப்பிலியபுரம் வாரச்சந்தையில் முக கவசம் இன்றி பொதுமக்கள் உலா வந்தனர்.
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாரச்சந்தைகள் கூடுவது வழக்கம். நாடு முழுவதும் கொரோனா அச்சத்தால் மக்கள் பீதி அடைந்து உள்ள நிலையில், இந்த வாரச்சந்தைகளில் பொதுமக்கள் எவ்வித நோய் தொற்று அச்சம்இல்லாமல், முககவசம் இன்றியும், சமூகஇடைவெளி இன்றியும் சுதந்திரமாக உலா வந்தனர். கொரோனா பற்றிய விழிப்புணர்வின்றி, கொரோனா மேலும் பரவும் சூழ்நிலைகள் பொதுமக்கள் அதிகம் கூடும் வாரச்சந்தைகளில் இருப்பதால், சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் சற்று கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story