தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 19 பேர் இறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 7 ஆயிரத்து 380 லிட்டர் திரவ ஆக்சிஜன், 160 பி வகை சிலிண்டர், 97 டி வகை சிலிண்டர்கள் உள்ளன. கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் 36 பி வகை சிலிண்டர், 7 டி வகை சிலிண்டர்கள் உள்ளன.
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 9 பி வகை ஆக்சிஜன் சிலிண்டர், 8 டி வகை ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 380 லிட்டர் திரவ ஆக்சிஜன், 205 பி வகை சிலிண்டர், 112 டி வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள் தற்போது இருப்பு உள்ளது. இதனால் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.
மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 19 பேர் இறந்ததாக வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அது போன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story