அரசு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத நிலை


அரசு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத நிலை
x
தினத்தந்தி 28 April 2021 12:35 AM IST (Updated: 28 April 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாத நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 
மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாத நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
கட்டுப்பாட்டு பகுதிகள் 
தமிழக அரசு கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து அப்பகுதிகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை. வணிக செயல்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ளாட்சி அமைப்புகள் முறையான தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வழிகாட்டு நெறிமுறை 
மாவட்டத்தில் தற்போது 14 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பகுதிகளில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை.
 அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. ஆனாலும் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இதனை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கிருமி நாசினி 
 தற்போது உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பிளீச்சிங் பவுடரை மட்டும் தூவி விட்டு செல்லும் நிலை உள்ளது.
 அரசு அறிவித்தபடி கிருமிநாசினிகள் மூலம் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தூய்மைப்டுத்த பஞ்சாயத்து நிர்வாகத்திடம் போதிய நிதி வசதி இல்லாத நிலை உள்ளது. விருதுநகரில் லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றப்படாத நிலை நீடிக்கிறது.
அவசியம் 
 மேலும் லட்சுமி நகர் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. இந்த பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கிராமங்களை அறிவிக்கும்போது அந்த கிராமங்களில் அரசு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதுடன் தேவையான தடுப்பு நடவடிக்கை எடுக்க பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டியது அவசியமாகும்.

Next Story