தடுப்பூசி போட வருபவர்கள் அலைக்கழிக்கப்படும் நிலை
மருந்து தட்டுப்பாட்டால் தடுப்பூசி போட வருபவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மருந்து தட்டுப்பாட்டால் தடுப்பூசி போட வருபவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி
மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே முன்களப்பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தை பொறுத்தமட்டில் இதுவரை 60 சதவீதம் முன்கள பணியாளர்கள், 63 சதவீத சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 90 சதவீதம் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டு உள்ள நிலையில் இதுவரை ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு
இந்தநிலையில் மாவட்டத்தில் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி சமீபத்தில் 10 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து வந்ததாக கூறப்பட்டாலும் 2 நாட்களில் தடுப்பூசி மருந்து இல்லாத நிலையில் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பில்லாத நிலை உள்ளது. கோவேக்சின் தடுப்பூசி மருந்து ஏற்கனவே வந்துள்ள மருந்தை வைத்து கூட 2-வதுடோஸ் போட வேண்டியவர்களுக்கு கூட போட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அவர்கள் இரண்டாவது டோஸ் போடாவிட்டால் முதல் டோஸ் போட்ட பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும் என கூறப்படுகிறது.
முன்பதிவு
இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தடுப்பூசி போடுவதற்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் வரும் நிலை உள்ளது.
ஆனால் தடுப்பூசிமருந்து தட்டுப்பாட்டால் அவர்களை இரண்டு தினங்கள் கழித்து வருமாறு அலைக்கழிக்கும் நிலை உள்ளது. முன்பதிவு செய்து கொண்டாலும் கூட தடுப்பூசிபோட மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன் பதிவு செய்தவர்களுக்கு கூட இன்னும் கோவேக்சின் தடுப்பூசி போடப்படாத நிலை நீடிக்கிறது.
நடவடிக்ைக
எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடுவதற்கான தடுப்பூசி மருந்துகளை வரவழைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆர்வத்தோடு தடுப்பூசி போட வருபவர்களை அலைக்கழிக்காமல் உடனடியாக தடுப்பூசி போடுவதற்கு தேவைப்படும் தடுப்பூசி மருந்து டோஸ்களை மதிப்பீடு செய்து அரசிடமிருந்து போதியளவு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story