குழந்தை கடத்தல் கும்பல் நடமாட்டமா?
குழந்தை கடத்தல் கும்பல் நடமாட்டமா?
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-உடுமலை மெயின்ரோட்டில் உள்ள மாக்கினாம்பட்டி, வைகை நகர் பகுதியில் நேற்று குடுகுடுப்பைக்காரன் போல் வேடமணிந்த கும்பல் ஒன்று வந்ததாகவும், அதில் ஒரு நபர் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகளின் மீது மை தடவ முயன்றதாகவும் தெரிகிறது.
இதனால் பயந்துபோன குழந்தைகள் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து பெற்றோர்கள் வீட்டைவிட்டு வேகமாக வெளியே வந்துபோது மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர் என்று சமூக வளைதலங்களில் தகவல் பரவியது.
இதை அறிந்த பொள்ளாச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என விசாரணை நடத்தினர். இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் கூறுகையில், குழந்தைகள் கடத்தல் கும்பல் நடமாட்டம் என்று சமூக வலைதளங்களில் வந்த தகவலையடுத்து, பொள்ளாச்சி அடுத்துள்ளமாக்கினாம்பட்டி பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது ஆய்வில், அதுபோன்று நபர்கள் நடமாட்டம் இல்லை.
எனினும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.
Related Tags :
Next Story