மாவட்ட செய்திகள்

போலீஸ் ஏட்டு தற்கொலை + "||" + He called his wife due to a family problem and committed suicide

போலீஸ் ஏட்டு தற்கொலை

போலீஸ் ஏட்டு தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக மனைவிக்கு போன் செய்து விட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்
மேலூர்
மேலூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனைவிக்கு போன் செய்து விட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் ஏட்டு
மேலூர் அருகே ராசினாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம்(வயது 35). கீழவளவு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு கனிஷ்கா(11), செனிஷ்கா(9) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் மேலூர் கஸ்தூரிபாய் நகரில் வசித்து வந்தனர். 
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் செல்வம் மனைவி கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். 
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீஸ்காரர் செல்வம் பணி முடிந்து வீட்டுக்கு வந்தார். ஏற்கனவே இருந்த வயிற்றுவலி மற்றும் குடும்ப பிரச்சினையால் மனவேதனை அடைந்த அவர், வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
அவர் தூக்குப்போடுவதற்கு முன்பு தான் தற்கொலை செய்ய போவதாக செல்போனில் அவரது மனைவியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
2. தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல்
தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
3. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. திருமணமான 29 வது நாளில் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை
திருமணமான 29 வது நாளில் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்
5. விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.