மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ
ஏழாயிரம் பண்ணை அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டி கிராமத்தில் உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 40 அறைகள் உள்ளன. விதிமுறை மீறல் காரணமாக இந்த ஆலையில் தற்போது உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை இந்த பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது மின்னல் தாக்கியதில் பட்டாசு வைத்திருக்கும் அறையில் பட்டாசுகள் வெடித்து சிதறின.
இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் முழுவதும் நாசமானதாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story