நாமக்கல்லில் ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


நாமக்கல்லில்  ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 28 April 2021 1:52 AM IST (Updated: 28 April 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம். அதன்படி நேற்று அங்கு பருத்தி ஏலம் நடந்தது. 
அதில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 2,000 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். உங்க பருத்தி மூட்டைகள் ரூ.40 லட்சத்திற்கு ஏலம் போனது.


இதில் ஆர்.சி.எச்‌. ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ‌.5 ஆயிரத்து 950 முதல் ரூ‌.6 ஆயிரத்து 800 வரையிலும், டி.சி.எச்‌. ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ‌.6 ஆயிரத்து 100 முதல் ரூ‌.8 ஆயிரம் வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ‌.2 ஆயிரத்து 200 முதல் ரூ‌.3 ஆயிரத்து 900 வரையிலும் ஏலம் போனது. 
இந்த பருத்தி மூட்டைகளை சேலம், கொங்கணாபுரம், திருப்பூர், திண்டுக்கல், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏலத்தில் எடுத்துச்சென்றனர்.

Next Story