சார்ஜாவில் இருந்து கடத்தல்; பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் தங்கம் சிக்கியது


சார்ஜாவில் இருந்து கடத்தல்; பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் தங்கம் சிக்கியது
x
தினத்தந்தி 28 April 2021 2:14 AM IST (Updated: 28 April 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

 அப்போது ஒரு வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த வாலிபரை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் வயிற்றுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபருக்கு இனிமா கொடுத்து வயிற்றுக்குள் இருந்து தங்கத்தை அதிகாரிகள் வெளியே எடுத்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும். அந்த வாலிபரை பிடித்து விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

விசாரணையில் அவர் தமிழ்நாடு திருச்சியை சேர்ந்த 21 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. ஆனால் அவரது பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். அந்த வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story