வைரஸ் தொற்றுக்கு 180 பேர் பலி; கர்நாடகத்தில் புதிதாக 31,830 பேருக்கு கொரோனா


வைரஸ் தொற்றுக்கு 180 பேர் பலி; கர்நாடகத்தில் புதிதாக 31,830 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 April 2021 2:37 AM IST (Updated: 28 April 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 31,830 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு 180 பேர் உயரிழந்தனர்.

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 31,830 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு 180 பேர் உயரிழந்தனர்.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இறந்தவர்கள் எண்ணிக்கை

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 70 ஆயிரத்து 116 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 31,830 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 775 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 180 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 807 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 10,793 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 84 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,063 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 899 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 17,550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 283 பேர், பல்லாரியில் 907 பேர், பெலகாவியில் 219 பேர், பெங்களூரு புறநகரில் 599 பேர், பீதரில் 328 பேர், சாம்ராஜ்நகரில் 212 பேர், சிக்பள்ளாப்பூரில் 544 பேர், சிக்கமகளூருவில் 275 பேர், சித்ரதுர்காவில் 145 பேர், தட்சிண கன்னடாவில் 486 பேர், தாவணகெரேயில் 300 பேர், தார்வாரில் 423 பேர், கதக்கில் 119 பேர், ஹாசனில் 503 பேர், ஹாவேரியில் 99 பேர், கலபுரகியில் 772 பேர், குடகில் 373 பேர், கோலாரில் 548 பேர், கொப்பலில் 382 பேர், மண்டியாவில் 737 பேர், மைசூருவில் 2,042 பேர், ராய்ச்சூரில் 736 பேர், ராமநகரில் 169 பேர், சிவமொக்காவில் 256 பேர், துமகூருவில் 1,196 பேர், உடுப்பியில் 477 பேர், உத்தரகன்னடாவில் 205 பேர், விஜயாப்புராவில் 531 பேர், யாதகிரியில் 414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 97 பேரும், பல்லாரியில் 18 பேரும், மைசூருவில் 9 பேரும், கலபுரகியில் 7 பேரும், ராமநகரில் 6 பேரும், தார்வார், ஹாசன், பீதரில் தலா 5 பேரும், விஜயாப்புராவில் 4 பேரும், பெங்களூரு புறநகர், ஹாவேரி, துமகூருவில் தலா 3 பேரும் உள்பட மொத்தம் 180 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் நேற்று மீண்டும் சற்று அதிகரித்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story