மாவட்ட செய்திகள்

நெல்லையில் வாலிபர் மீது மோதியதால் பஸ் கண்ணாடி உடைப்பு + "||" + Bus glass shattered as it collided with a walker in Nellai

நெல்லையில் வாலிபர் மீது மோதியதால் பஸ் கண்ணாடி உடைப்பு

நெல்லையில் வாலிபர் மீது மோதியதால் பஸ் கண்ணாடி உடைப்பு
நெல்லையில் வாலிபர் மீது மோதியதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கற்களை வீசி பஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை, 

நெல்லையில் வாலிபர் மீது பஸ் மோதியதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கற்களை வீசி பஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலிபர் மீது பஸ் மோதல்

நெல்லை பாளையங்கோட்டை பெரியபாளையம் உத்திர பசுபதி நாயனார் தெருவை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 31). இவர் நேற்று உறவினர் ஒருவரது இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். ஊர்வலத்தின் பின்னால் தனது மோட்டார் சைக்கிளில் அவர் சென்று கொண்டிருந்தார்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி அரசு சித்த மருத்துவ கல்லூரி அருகே சென்றபோது பின்னால் வந்த ஒரு தனியார் பஸ், செல்வகணேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கத்தின் அடிப்பகுதியில் செல்வகணேஷ் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

கண்ணாடி உடைப்பு

இதைக்கண்ட அவருடைய உறவினர்கள் ஆத்திரம் அடைந்து பஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் திடீரென்று பஸ் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலத்த காயமடைந்த செல்வகணேசை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பஸ்சில் வந்த பயணிகள் மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சம்பவ இடத்தில் பஸ்சின் கண்ணாடி உடைந்து சாலை முழுவதும் சிதறி கிடந்தது. 
இதைக்கண்ட போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அருகில் உள்ள கடையில் இருந்து துடைப்பத்தை எடுத்து வந்து சாலை முழுவதும் சிதறிக் கிடந்த கண்ணாடி துண்டுகளை பெருக்கி சாலையின் ஓரத்துக்கு தள்ளினார். அவருக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தியாகதுருகம் அருகே இருதரப்பினரிடையே பயங்கர மோதல் பஸ் கண்ணாடி உடைப்பு
தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடையே நடந்த பயங்கர மோதலில் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. வீட்டை சூறையாடியவர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
2. மந்தாரக்குப்பம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
மந்தாரக்குப்பம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைத்த வாலிபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
3. ரிஷிவந்தியம் அருகே கல்வீசி பஸ் கண்ணாடி உடைப்பு
ரிஷிவந்தியம் அருகே கல்வீசி பஸ் கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
4. அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்; கார் கண்ணாடி உடைப்பு
அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
5. தி.மு.க.வேட்பாளர் பிரசார வாகனத்தின் கண்ணாடி உடைப்பு
திருமயம் அருகே தி.மு.க.வேட்பாளரின் பிரசார வாகனத்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.