நெல்லை அருகே கடையை சேதப்படுத்திய 2 பேர் கைது


நெல்லை அருகே கடையை சேதப்படுத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 April 2021 4:37 AM IST (Updated: 28 April 2021 4:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கடையை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 41). இவர் அங்கு டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (21), மாயாண்டி (20) ஆகிய 2 பேரும் தங்களது கூட்டாளிகளுடன் முருகேசன் டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது முருகேசனின் நாய் குரைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, மாயாண்டி இருவரும் சேர்ந்து நள்ளிரவில் கடையை சேதப்படுத்தி உள்ளனர். இதை தடுக்க வந்த முருகேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதங்கம் வழக்குப்பதிவு செய்து மாயாண்டி, இசக்கி முத்துவை கைது செய்தார்.

Next Story