கொண்டலாம்பட்டி அருகே கார் மோதி பால் சேகரிப்பாளர் சாவு


கொண்டலாம்பட்டி அருகே கார் மோதி பால் சேகரிப்பாளர் சாவு
x
தினத்தந்தி 28 April 2021 5:19 AM IST (Updated: 28 April 2021 5:19 AM IST)
t-max-icont-min-icon

கொண்டலாம்பட்டி அருகே கார் மோதி பால் சேகரிப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டி அருகே கார் மோதி பால் சேகரிப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பால் சேகரிப்பாளர்
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரியானூர் நல்லராயன் பட்டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் மணிமாறன் (வயது 23). இவர் நல்லராயன்பட்டி மலங்காடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பால் சேகரிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனது பணியை முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் மேம்பாலம் பகுதியில் அவர் சாலையை கடக்க முயன்றார்.
கார் மோதி பலி
அப்போது சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மணிமாறன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மணிமாறன் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து  கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியை சேர்ந்த கார் டிரைவர் ராஜேஷ்குமார் என்பவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story