ஒரே நாளில் 77 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் 15,830 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 77 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் 15,830 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 April 2021 6:24 AM IST (Updated: 28 April 2021 6:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 16 ஆயிரத்து 868 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9,508 ஆண்கள், 6,322 பெண்கள் என மொத்தம் 15 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 561 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,262 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 4,640 பேரும், செங்கல்பட்டில் 1,181 பேரும், கோவையில் 996 பேரும், திருவள்ளூரில் 717 பேரும் குறைந்தபட்சமாக நீலகிரியில் 43 பேரும், பெரம்பலூரில் 32 பேரும், அரியலூரில் 22 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

11 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 233 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 72 ஆயிரத்து 280 ஆண்களும், 4 லட்சத்து 41 ஆயிரத்து 184 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 40 ஆயிரத்து 323 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 55 ஆயிரத்து 57 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 46 பேரும், தனியார் மருத்துவமனையில் 31 பேரும் என 77 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில் நேற்று சென்னையில் 27 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், காஞ்சீபுரத்தில் 7 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், சேலத்தில் 5 பேரும், கடலூர், கன்னியாக்குமரியில் தலா 3 பேரும், மதுரை, தஞ்சாவூர், நெல்லையில் தலா 2 பேரும், அரியலூர், கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 22 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 728 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

14,043 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 14,043 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,519 பேரும், செங்கல்பட்டில் 147 பேரும், கோவையில் 745 பேரும், திருவள்ளூரில் 558 பேரும் அடங்குவர். இதுவரையில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 919 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 855 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story