முககவசம் அணியாத பயணிகளுக்கு பஸ்சில் அனுமதி இல்லை. வேலூரில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு.


முககவசம் அணியாத பயணிகளுக்கு பஸ்சில் அனுமதி இல்லை. வேலூரில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு.
x
தினத்தந்தி 28 April 2021 5:58 PM IST (Updated: 28 April 2021 5:58 PM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாத பயணிகளுக்கு பஸ்சில் அனுமதி இல்லை. வேலூரில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் முககவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

பஸ்களில் முககவசம் அணிந்தபடி தான் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் முககவசம் அணியாமல் பயணம் செய்கிறார்கள். இதனை தடுக்க வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு, தனியார் பஸ்களில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான ஊழியர்கள் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினர்.

 அதில், முககவசம் இல்லாமல் பஸ்சில் பயணம் செய்வதற்கு அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் முககவசம் அணியாமல் வரும் பயணிகளை பஸ்சில் அனுமதிக்க வேண்டாம். அதேபோன்று அதிகளவு பயணிகளை ஏற்றி நின்றபடி யாரையும் அழைத்து செல்ல கூடாது என்று பஸ் கண்டக்டர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

Next Story