வந்தவாசியில் டாக்டர் இல்லாமல் செயல்படும் கால்நடை மருத்துவமனை


வந்தவாசியில் டாக்டர் இல்லாமல் செயல்படும் கால்நடை மருத்துவமனை
x
தினத்தந்தி 28 April 2021 9:49 PM IST (Updated: 28 April 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் டாக்டர் இல்லாமல் செயல்படும் கால்நடை மருத்துவமனை

வந்தவாசி

வந்தவாசியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை, டாக்டர் மற்றும் மருந்து இல்லாமல் செயல்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு டாக்டர் இல்லாததால் உதவியாளர்களே மருத்துவம் பார்க்கின்றனர். நேற்று காலை ஒருவர் வீட்டில் வளர்க்கும் நாய் குட்டியை மருத்துவம் பார்ப்பதற்கு அழைத்து வந்தபோது டாக்டர் இல்லை. மருந்து இல்லை என்று கால்நடைகளை திரப்பி அனுப்புகின்றனர். 

இதனால் கால்நடைகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே உடனடியாக மருத்துவரை நியமித்து, தேவையான மருந்துகளை இருப்பு வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story