செஞ்சி தாசில்தார் கார் மோதி மாணவி சாவு


செஞ்சி தாசில்தார் கார் மோதி மாணவி சாவு
x
தினத்தந்தி 28 April 2021 10:09 PM IST (Updated: 28 April 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி தாசில்தார் கார் மோதி படுகாயமடைந்த மாணவி உயிாிழந்தாா்.

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது  மகள் மணிமேகலை (15). இவர் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார். 

கடந்த 25-ந்தேதி  மணிமேகலை  பலாப்பட்டில்  சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து செஞ்சி நோக்கி, செஞ்சி தாசில்தார் ராஜன் ஓட்டி வந்த கார், மாணவி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் தலை மற்றும் காலில் பலத்த காயமடைந்த மணிமேகலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மணிமேகலை பரிதாபமாக  உயிரிழந்தார்.

 இது குறித்து குணசேகரன் அளித்த புகாரின்பேரில் அனந்தபுரம் போலீசார் தாசில்தார் ராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story