பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது
தேனியில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
மதுரை திருநகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராஜா (வயது 27).
இவர் நேற்று முன்தினம் தேனி அருகே அரண்மனைப்புதூர்-கொடுவிலார்பட்டி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க முயன்றார்.
அப்போது அங்கு பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வெங்கிடசாமி (60), கோட்டூரை சேர்ந்த ராணி (52) ஆகியோர், தங்களிடம் உல்லாசமாக இருக்க அழகிகள் இருப்பதாகவும், ரூ.1,500 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா தலைமையில் போலீசார் அந்த தங்கும் விடுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 3 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
அங்கிருந்த கொல்கத்தா, ஊட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களை போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வெங்கிடசாமி, ராணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட 3 பெண்களையும் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story