வால்பாறையில் வனப்பகுதிக்குள் காட்டு யானை இறந்து கிடந்தது


வால்பாறையில் வனப்பகுதிக்குள் காட்டு யானை இறந்து கிடந்தது
x
தினத்தந்தி 28 April 2021 10:28 PM IST (Updated: 28 April 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் வனப்பகுதிக்குள் காட்டு யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வால்பாறை

வால்பாறையில் வனப்பகுதிக்குள் காட்டு யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டு யானை இறந்து கிடந்தது

வால்பாறை அருகே உள்ள பழைய வால்பாறை, வரட்டுப்பாறை ஆகிய எஸ்டேட் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியையொட்டிய வனப்பகுதிகளில் வனத்துறையினர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது வரட்டுப்பாறை காபி எஸ்டேட் 23-ம் எண் காபி தோட்டத்தையொட்டிய வனப்பகுதிக்குள் காட்டு யானை உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. 

இதனைக்கண்ட வனத்துறையினர், உடனடியாக வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் யானை இறந்தது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் ஆரோக்கியராஜ்  சேவியருக்கு தகவல் கொடுத்தார். 

இதனையடுத்து துணை இயக்குனரின் உத்தரவின் பேரில் உதவி வனபாதுகாவலர் செல்வன் தலைமையில் வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் வால்பாறை அரசு கால்நடை டாக்டர் மெய்யரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் விசாரணை

யானை உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனைக்கு பிறகு யானையின் உடல் வனவிலங்குகளின் உணவுக்காக அங்கேயே போடப்பட்டது. யானையின் உடலில் இருந்து கோரை பற்கள் மட்டும் எடுக்கப்பட்டன. தொடர்ந்து யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் கூறுகையில், இறந்த கிடந்தது 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஆகும். இந்த காட்டு யானை இறந்து 2 வாரங்களுக்கு மேல் இருக்கலாம். உடல் நலக்குறைவு காரணமாக யானை இறந்திருக்கலாம் என்று தெரிவித்தார். 

Next Story