திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
493 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 612-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று ஒரே நாளில் 406 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 687-ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதித்த 2 ஆயிரத்து 689 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story