தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2021 11:16 PM IST (Updated: 28 April 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

போடியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போடி: 

போடி நகராட்சி தூய்மை பணியாளர்கள் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதற்கு சி.ஐ.டி.யு. போடி மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தின்போது, ஓய்வூதியம் வழங்கவேண்டும். 

பணி செய்வதற்கு தேவையான அடிப்படை உபகரணங்கள் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். 

பின்னர் நகராட்சி கமிஷனர் ஷகீலாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.


 அப்போது தங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.


Next Story