கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 125 பேருக்கு கொரோனா


கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 125 பேருக்கு கொரோனா
x

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கொரோனாவிற்கு இறந்தார்.

கரூர்
125 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
ஒருவர் சாவு
இவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 125 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  மாவட்டத்தில் 840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

Next Story