திருச்சி மத்திய சிறையில் கைதிகளை பார்க்க தடை


திருச்சி மத்திய சிறையில் கைதிகளை பார்க்க தடை
x
தினத்தந்தி 29 April 2021 12:23 AM IST (Updated: 29 April 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய சிறையில் கைதிகளை பார்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, 
கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு சிறையில் கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. அதேநேரம் கைதிகள் உறவினர்களுடன் செல்போன் வீடியோ காலில் பேசும் வசதி தொடங்கப்பட்டது. 
பின்னர் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இயல்புநிலை திரும்பியது. சிறையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கைதிகளை உறவினர்கள் மனு போட்டு பார்க்கும் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது. 
இந்தநிலையில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமெடுக்க தொடங்கி இருப்பதால் திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் பார்க்க நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை சிறைகளிலும் கைதிகளை உறவினர்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story