கொரோனா குறித்த புகார்களை கட்டுப்பாட்டு மையத்துக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் - கலெக்டர் கிரண்குராலா தகவல்


கொரோனா குறித்த புகார்களை கட்டுப்பாட்டு மையத்துக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் - கலெக்டர் கிரண்குராலா தகவல்
x
தினத்தந்தி 29 April 2021 12:37 AM IST (Updated: 29 April 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறித்த தகவல் மற்றும் புகார்களை கட்டுப்பாட்டு மையத்துக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் சுகாதாரம், வருவாய், ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தொற்று குறித்த சந்தேகங்கள், தகவல்கள் மற்றும் புகார்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்களான (04151 -228801, 220000, 04151-1077 மற்றும் 9499933834 மூலமாகவும், 94999 33834 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவும், 1075 என்ற மாநில கட்டுப்பாட்டு எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

Next Story