பாபநாசம் கோவில் படித்துறையில் 3 டன் துணிக்கழிவுகள் அகற்றம்


பாபநாசம் கோவில் படித்துறையில் 3 டன் துணிக்கழிவுகள் அகற்றம்
x
தினத்தந்தி 29 April 2021 12:53 AM IST (Updated: 29 April 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் கோவில் படித்துறையில் 3 டன் துணிக்கழிவுகள் அகற்றப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம், ஏப்:
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான பாபநாசம் பாபவிநாசர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அப்போது கோவில் முன்பு உள்ள படித்துறையில் தாமிரபரணி ஆற்றில் பரிகாரம் எனும் பெயரில் பொதுமக்கள் தாங்கள் உடுத்திய துணிகளை விட்டுச் செல்கிறார்கள். இதனை அவ்வப்போது விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் சார்பில் சுகாதார பணியாளர்களை கொண்டு அகற்றுவது வாடிக்கையாக உள்ளது. நேற்று ஆணையாளர் காஞ்சனா உத்தரவுப்படி தாமிரபரணி ஆற்றில் சுகாதார ஆய்வாளர் கணேசன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் தாமிரபரணி ஆற்றில் 3 டன் அளவுள்ள துணிக்கழிவுகளை அப்புறப்படுத்தினர்.

Next Story