பள்ளி மாணவருக்கு கொரோனா
பள்ளி மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தேவகோட்டை,
தேவகோட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவருக்கு கொேரானா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து அந்த மாணவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல வந்த அலுவலர்கள் அவரை அழைத்தபோது அச்சத்தில் அவர்களிடம் இருந்து தப்பிஓடி வயல்காட்டு பகுதியில் சுற்றி திரிந்தார். அவரை தேவ கோட்டை தாசில்தார் ராஜரத்தினம் தலைமையில் கிராம உதவியாளர்கள், அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். பின்னர் அவரை வேலாயுதபட்டினம் மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் சிகிச்சைக்காக ஒப்படைத்தனர். அதன் பின்னர் நேற்று அமராவதி புதூர் மருத்துவமனைக்கு மாணவரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரோடு பழகிய நபர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் அந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story